வருமான வரி தாக்கல், ஆதாருடன் பான் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்

வருமான வரி தாக்கல் மற்றும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் இணை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதமாக தொழில் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.

வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும்.

2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்படும்.

ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதங்களில் எந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

ஜி.எஸ்.டி., சுங்க.வரி கணக்கு தாக்கல் செய்ய தொழில்துறையினருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். 5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com