பாகிஸ்தானில் சோகம் - பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 19 பேர் பலி

பாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 19 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த பகுதி
விபத்து நடந்த பகுதி
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் அருகே சீக்கிய பயணிகள் சிலர் பஸ்சில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

ஷேக்புரா என்ற பகுதியில் அந்த பஸ் ஆளில்லா ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சுற்றுலா பஸ் மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து போலீசாரும் மீட்புக் குழுவினரும் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com