செல்பி மோகத்துக்காக உயிரை பணையம் வைத்த நபர் - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிராவில் உள்ள சின்ஹகட் கோட்டை அருகே ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Maharashtra #SelfieKills
செல்பி மோகத்துக்காக உயிரை பணையம் வைத்த நபர் - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Published on

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற சின்ஹகட் கோட்டை பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாகும். இங்கு வரும் மக்கள் கோட்டையின் கம்பீரத்தையும், மலையின் மீது இருந்து இயற்கையின் அழகையும் ரசிப்பது வழக்கம். அதேசமயம், இங்கு ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பலர் தங்கள் உயிரை பணையம் வைத்துள்ளனர்.

அதேபோல், இந்த சின்ஹகட் கோட்டைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் செல்பி எடுக்க முயன்றுள்ளார். கோட்டையின் விளிம்பில் சென்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com