திருப்பூரில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் பள்ளி சென்று திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருப்பூர்:

திருப்பூர் நல்லூர் கோவில்வழியை சேர்ந்தவர் சிவகுமார். ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. பனியன் தொழிலாளி. இவர்களது மகள் சுபத்ரா (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சுபத்ராவும் பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு சென்ற சுபத்ரா மாலையில் வீடு திரும்பினார். அவரை தொடர்ந்து அவரது பெற்றோரும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்து பார்த்த போது மகள் சுபத்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் இது குறித்து நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com