குளச்சல் அருகே 9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்- தந்தை மீது போலீசார் வழக்கு

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய கணவர் மீது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
குளச்சல் அருகே 9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்- தந்தை மீது போலீசார் வழக்கு
Published on

குளச்சல்:

குளச்சல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

மாணவிக்கு கடந்த சில நாட்களாக திடீர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார், அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள்,  மாணவி, கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

இது பற்றி மாணவியின் உறவினர்கள் அவரிடம் கேட்டபோது, தந்தை தான் தன்னை கற்பழித்ததாக கூறினார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தாயார் வீட்டில் இல்லாத போது தந்தை தன்னை கற்பழித்து விட்டதாகவும், இதை வெளியே சொன்னால் தாயாரை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், குளச்சல் அனைத்து  மகளிர் போலீசில் புகார் செய்தார்.

குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன். கீதா, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் மாணவியின் தந்தை மைக்கேல் என்ற மிக்கேல் (வயது 44) என்பவர் மீது இந்திய தண்டனை சட்டம் 506 (1) மற்றும் போக்சோ சட்ட பிரிவில் வழக்குபதிவு செய்தனர்.

புகார் கூறப்பட்ட மைக்கேல் தற்போது வெளியூரில்  வேலை பார்த்து வருகிறார். தகவல் அறிந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து மகளிர் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com