செய்யாறில் 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் கைது

செய்யாறில் இயற்கை உபாதை கழிக்க தனியாக சென்ற 9 -ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

செய்யாறு:

செய்யாறு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 59). லாரி டிரைவர். கடந்த ஜனவரி மாதம் பள்ளி மாணவி இயற்கை உபாதை கழிக்க தனியாக சென்றுள்ளார். அப்போது கஜேந்திரன் மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்து போன மாணவி யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் மாணவி சோர்வாக இருந்துள்ளார். அவரது தாய் விசாரித்தபோது நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து மாணவியை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ததில் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் கஜேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com