வாஜ்பாய் பிறந்தநாள்: 93 கைதிகளை விடுதலை செய்ய உ.பி. அரசு முடிவு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 93-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறை கைதிகளின் தண்டனையை குறைத்து 93 பேரை விடுதலை செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
வாஜ்பாய் பிறந்தநாள்: 93 கைதிகளை விடுதலை செய்ய உ.பி. அரசு முடிவு
Published on

லக்னோ:

மத்தியில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியின் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடித்த முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். 25-12-2017 அன்று பிறந்த இவர் 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராடி பொது வாழ்வில் நுழைந்தார்.

லக்னோ தொகுதி எம்.பி.யாக 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்துமுறை இவர் வெற்றி பெற்றுள்ளார். பிரதமராவதற்கு முன்னர் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவிவகித்த வாஜ்பாய், உடல்நலக் குறைவால் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

வரும் 25-ம் தேதி அடல் பிஹாரி வாஜ்பாயின் 93-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறை கைதிகளின் தண்டனையை குறைத்து 93 பேரை விடுதலை செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

வழக்குகளில் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராத தொகையை செலுத்த முடியாததால் கூடுதலாக சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் பட்டியலில் இருந்து இந்த 93 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேசம் மாநில உள்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் அரவிந்த் குமார் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com