விபத்துகுள்ளான பஸ்
விபத்துகுள்ளான பஸ்

மத்திய பிரதேசத்தில் பஸ் விபத்தில் 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் பஸ்சும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் 9 பேர் பலியானதாகவும் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Published on

ரிவா:

மத்திய பிரதேசம் மாநிலம் ரிவா மாவட்டத்தில் சித்தி என்ற இடத்தில் குத் என்கிற சாலை உள்ளது. இங்கு இன்று காலை 6.30 மணியளவில் ஒரு பஸ்சும் லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் பஸ் பலத்த சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 10 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com