

கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். கடந்த எட்டாண்டுகளாக இவர்களின் கொலைவெறிக்கு சுமார் 20 ஆயிரம் உயிர்கள் பலியாகியுள்ளன.
இதற்கிடையில், கடந்த 14-4-2014 அன்று நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற போக்கோ ஹாரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்.
அவர்களை 'செக்ஸ்' அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவத்தை அனுப்பியது.
கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் தப்பி ஓடி வந்துவிட்ட நிலையில், போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் பிடியில் 219 மாணவிகள் உள்ளதாக கூறப்பட்டது. மாணவிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் நைஜீரிய அரசு திணறியது. அதே வேளையில், கடத்தப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் மாணவிகளை மீட்க முடியாத நைஜீரிய அரசின் கையாலாகாதத்தனத்துக்கு உலகெங்கிலும் உள்ள பெண்ணுரிமை இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தீவிரவாதிகள் பிடியில் மாணவிகள்
அங்கு ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் நீடித்துவந்த இந்த பேச்சுவார்த்தையின் பலனாக நைஜீரிய சிறைகளில் இருக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகளை அரசு விடுவித்தால் அதற்கு மாற்றாக சிறைபிடிக்கப்பட்டுள்ள மாணவிகளில் சிலரை விடுவிப்பதாக போக்கோ ஹரம் குழுவினர் நிபந்தனை விதித்தனர்.
அந்த நிபந்தனையின்படி, ஆறு மாதங்களுக்கு முன்னர் முதல்கட்டமாக 21 மாணவிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் குழந்தைக்கு தாயாக மாறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட பின்னர் மாணவிகள்