கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 80 பவுன்- பணம் கொள்ளை

கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 80 பவுன்- பணம் கொள்ளை
Published on

கோவை:

கோவை பேரூர் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 68). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். நேற்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவில்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை சோதனை செய்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகை- ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்த அவர் பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com