தெலுங்கானா : கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் பலி

தெலுங்கானாவில் கனமழை காரணமாக வீட்டின் மீது கற்பாறை விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்நிலையில், அம்மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் உள்ள முகமதியா ஹூல்ஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு 10 மணியளவில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது கற்பாறை விழுந்தது. இதனால், வீட்டின் மேற்கூரை இடிந்து தங்கியிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்

விபத்து நடந்த பகுதியில் ஐதராபாத் எம்பி அசாரூதின் ஓவைசி பார்வையிட்டார். மேலும், மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com