வரதட்சணை கொடுமையால் 8 மாத கர்ப்பிணி தூக்குபோட்டு தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வரதட்சணை கொடுமையால் 8 மாத கர்ப்பிணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறது.
தற்கொலை
தற்கொலை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள சாலூர் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகள் பாஞ்சாலி (வயது23). இவருக்கும் கல்லாத்துப்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

8 மாத கர்ப்பிணியான பாஞ்சாலிக்கும், அவரது கணவர் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது அடிக்கடி தனது மனைவி பாஞ்சாலியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு சதீஸ்குமார் தொந்தரவு செய்து வந்தார். இதனால் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு பாஞ்சாலி சென்று விட்டார். அப்போது தாய் சகுந்தலா உடனே தனது மகள் பாஞ்சாலியை சமாதானம் செய்து மருமகன் சதீஸ்குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

நேற்று மீண்டும் கணவன்-மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாஞ்சாலி வீட்டில் தனியாக இருந்து போது தூக்குபோட்டு கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கும், பாஞ்சாலி உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பாஞ்சாலியின் தாயார் சகுந்தலா மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் பிணமாக கிடந்த பாஞ்சாலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் சகுந்தலா தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பிணி பாஞ்சாலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அரூர் உதவி கலெக்டர் புண்ணியகோடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com