

போபால்:
மத்தியபிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரநகர்-டோரியா கிராமங்களுக்கு இடையே சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் அந்த 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 8 பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதில் 2 பேர் பெண்கள், மற்ற 6 பேரும், 6 வயது முதல் 10 வயதுடைய சிறுவர்-சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய வேகத்தில் கார் சாலையில் கவிழ்ந்தது. அப்போது காரில் இருந்த பாதுகாப்பு பலூன் விரிந்ததால், அதில் பயணித்த அனைவரும் உயிர் தப்பினர். காரில் இருந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களை தீவிரமாக தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சதர்பூரில் சாலை விபத்தில் உயிரிழந்த எட்டு பேரின் மறைவுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.