உ.பி.யில் கோர விபத்து- திருமண விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் திருமண விழாவிற்கு சென்று வீடு திரும்பியவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
உ.பி.யில் கோர விபத்து- திருமண விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பலி
Published on

சம்பால்:

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஒரு வாகனம் சென்றுகொண்டிருந்தது. நள்ளிரவில் லெஹ்ரவன் கிராமத்தின் அருகே சென்றபோது, அந்த வாகனமும், அதே சாலையில் வந்த சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், பயணிகள் வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. அந்த வாகனத்தில் இருந்த 8 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளனர்.

சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்புக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com