உ.பி: பெண்ணிடம் அத்துமீற முயன்ற 8 பேர் கைது - தடுத்த பிரான்ஸ் சுற்றுலாவாசி மீதும் தாக்குதல்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களை தடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உ.பி: பெண்ணிடம் அத்துமீற முயன்ற 8 பேர் கைது - தடுத்த பிரான்ஸ் சுற்றுலாவாசி மீதும் தாக்குதல்
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள லக்ன்னா தாரி நீர்வீழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் வாரனாசியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் உறவினர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு  வந்த மர்ம கும்பல் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளனர். மேலும் அவரை தாக்கி உள்ளனர். அந்த பெண்ணை காப்பற்றுவதற்காக பிரான்ஸ் சுற்றுலா பயணி முயன்றார். இதனை அடுத்து கும்பல் சுற்றுலா பயணியையும் தாக்கியது. அவர் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com