பாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை - 8 பேர் கைது

திண்டிவனம் அருகே 2 சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை பிரிந்து, தனது 9 மற்றும் 7 வயது மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த சமயத்தில் தனது 2 மகள்களையும் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டில் அந்த பெண் விட்டு சென்றார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு வந்து 2 மகள்களையும் தன்னுடன் அழைத்து சென்று, புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்த்தார். ஒரு மகள் 4-ம் வகுப்பும், மற்றொரு மகள் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

உடனே இதுகுறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நலக்குழு தலைவர் ராஜேந்திரன் நேரில் சென்று அந்த சிறுமிகளிடம் விசாரித்தார். அப்போது சிறுமிகள் திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் இருந்தபோது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை பாலியல் கொடுமை செய்ததாக தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதி விழுப்புரம் மாவட்டம் என்பதால் அங்குள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு அறிக்கை அனுப்பி இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் பரிந்துரைத்தார். அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சசிகுமார், உறுப்பினர் லூர்துசேவியர், குழந்தைகள் நல பாதுகாப்பு திட்ட அலுவலர் கஜலட்சுமி, திண்டிவனம் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com