சேலம் அருகே கஞ்சா விற்ற 8 பேர் கைது

சேலம் அருகே கஞ்சா விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சங்ககிரி:

சேலம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது சங்ககிரியில் நடத்தப்பட்ட சோதனையில் அதே பகுதியைய சேர்ந்த மணிவண்ணன் (வயது 39) வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் அதே பகுதியை சேர்ந்த மோகன் (25) என்பவரை கஞ்சா விற்றதாக கைது செய்தனர். இதேபோன்று கொளத்தூரில் குருநாதன் (45), கருமலைக்கூடலில் செந்தில் (41), ஆட்டையாம்பட்டியில் பாபு (58), வாழப்பாடியில் பெருமாள் (48), எடப்பாடியில் ஏழுமலை (50) உள்பட 8 பேர் கஞ்சா விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையில் கஞ்சா விற்ற 27 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com