

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற ஏழாம்கட்ட தேர்தலில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.
இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில் 84.8 சதவீதம் வாக்குகள் பதிவானது. காஷ்மீர் பகுதியில் 30.3 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக 75.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.