

புதுடெல்லி:
வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்பாக எம்.பி.க்களின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் இன்று பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த 75 வீரர்கள் காணாமல்போய் பல்வேறு வகைகளில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டிருப்பதாகவும், இவர்களில் 54 பேர் இந்தியா-பாகிஸ்தான் போர்க்காலத்தில் பிடிபட்டவர்கள் என்றும் தனது பதிலில் அவர் தெரிவித்துள்ளார். இவர்களைப் பற்றிய சரியான தகவல்கள் ஏதும் பாகிஸ்தான் அரசால் அளிக்கப்படவில்லை.
மேலும், கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் 417 இந்திய மீனவர்களும், இலங்கை சிறைகளில் 15 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வி.கே.சிங் குறிப்பிட்டார்.