

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி நடந்த தேர்தலில் சுமார் 76.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு பிறகும் பலர் வாக்களிக்க ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்ததால் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிகட்ட தேர்தலில் 6 மணி வரையில் 71.93 சதவீதம் வாக்குகள் பதிவுவானதாக தெரியவந்துள்ளது.