திருமண விருந்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி- 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விருந்தில் பங்கேற்று உணவு சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சுமார் 70 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். #FoodPoison #Rajasthan
திருமண விருந்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி- 70 பேர் மருத்துவமனையில் அனுமதி
Published on

ராஜஸ்தான் மாநிலம் கிசாங்கர் நகரில் திங்கட்கிழமை இரவு ஒரு திருமண விழா நடைபெற்றது. விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தாசா நகரைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான விருந்தினர் பங்கேற்றனர். விருந்தினர் அனைவருக்கும் அசைவ உணவு  மற்றும் இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன.

திருமணம் முடிந்ததும் தாசா நகரைச் சேர்ந்த அனைவரும் நேற்று வீடு திரும்பினர். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திருமண விருந்திற்கு தயார் செய்யப்பட்ட உணவு, கடுமையான வெப்பம் காரணமாக கெட்டுப்போயிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், அந்த உணவின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #FoodPoison #Rajasthan

X

Maalai Malar
www.maalaimalar.com