உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிருக்கு 70 பேர் பலி

வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குளிர் தாங்க முடியாமல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். #coldweather #Uttarpradesh
உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிருக்கு 70 பேர் பலி
Published on

வடமாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. மலைப்பிரதேச மாநிலங்களில் 2 டிகிரி செல்சியசும், தரைப்பகுதிகளில் 5 டிகிரி செல்சியசும் குளிர் நிலவுகிறது. இன்னமும் ஒரு வார காலத்திற்கு இந்த குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைபோல வடமாநிலங்களில் பல விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மோசமான குளிரின் காரணமாக, தங்குவதற்கு வீடுகள் இன்றி சாலை ஓரங்களில் தங்கி இருக்கும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com