பொங்கலுக்குள் 7 புதிய காற்றழுத்தம் உருவாகும்- தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

பொங்கலுக்குள் தமிழகத்தில் 7 புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். #Rain #PrivateWeather
பொங்கலுக்குள் 7 புதிய காற்றழுத்தம் உருவாகும்- தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
Published on

வானிலை நிலவரம் குறித்து டெல்லி, சென்னையில் உள்ள மத்திய அரசின் வானிலை ஆய்வு மையங்கள் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகின்றன.

இதுபோல் தனியார் வானிலை ஆய்வாளர்கள் பலரும் வானிலையை கணித்து தகவல் வெளியிட்டு வருகிறார்கள்.

இன்று தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் கூறியதாவது:-

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று சீர்காழி அருகே கரையை கடந்து தற்போது தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

அது தற்போது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. நாளை (25-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை நிலவும்.

எனவே புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் மறு குடியமர்த்தப்பணி, மீட்பு பணி, நிவாரணப் பணி செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.

29, 30, டிசம்பர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்களில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்த பட்சம் 24 மணி நேரமாவது விட்டு விட்டு மழை பெய்யும்.

வடகிழக்கு பருவமழை இயல்பை விட நிச்சயமாக அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை வரை வட கிழக்கு பருவமழை பெய்ய சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.

அவற்றில் இரண்டு புயல்களாக மாற வாய்ப்பு இருக்கிறது. ஒன்று தென் தமிழகத்துக்கும், மற்றொன்று வட தமிழகத்துக்கும் வர வாய்ப்பு இருக்கிறது.

டிசம்பர் மாதம் 10-ந் தேதிக்கு மேல் பருவமழையின் இறுதி கட்டத்தில் தீவிர மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தின் ஒட்டு மொத்த மாவட்டங்களில் சராசரி மழையை வட தமிழகமும், சராசரியை விட கூடுதலான மழையை டெல்டாவும், 30 சதவீதத்துக்குமேல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களில் கூடுதலான மழையை பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

மழை தாமதம் அடைந்தாலும் பெய்ய வேண்டிய மழை டிசம்பர் இறுதிக்குள் பெய்யும். இன்னும் ஜனவரி மாதம் முதல் 15 தேதிக்குள்ளும் நல்ல மழை இருக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் நிறைய மழை பெய்யும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com