சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலையில் தொடர்புடைய 7 நக்சல்கள் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலையில் தொடர்புடைய 7 நக்சல்களை போலீசார் கைது செய்தனர்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலையில் தொடர்புடைய 7 நக்சல்கள் கைது
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் கிஸ்டாராம் மற்றும் பலோடி பாரா மிலிட்டரி முகாம் மீது நக்சல்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதில் 9 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய நக்சலைட்கள் கிஸ்டாராம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், கொம்ரம் சாடே (25), மட்கம் ஜோகா (31), மட்கம் ஹிட்மா (30), மட்கம் கங்கா (25), வஞ்சம் அய்டா (34), வஞ்சம் சின்ஹா (32), மாத் வி சுக்கா  (30), என 7 நக்சல்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கு சி ஆர் பி எப் வீரர்கள் படுகொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com