சவுகார்பேட்டையில் வேலை பார்த்த கடையில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த ஊழியர்

சவுகார்பேட்டையில் வேலை பார்த்த கடையில் ரூ.7 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சவுகார்பேட்டையில் வேலை பார்த்த கடையில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த ஊழியர்
Published on

ராயபுரம்:

சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவை சேர்ந்தவர் விஜய். இவர் நோட்டுபுத்தகம் மற்றும் பேன்சி பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் கடை நடத்துகிறார்.

இவரது கடையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.  5 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்  வேலைக்கு சேர்ந்தார். நேற்று மதியம் கடையில் யாரும் இல்லை. தினேஷ் மட்டும் தனியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடையில் வியாபாரத்துக்கு வைத்திருந்த ரூ.7 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்.

இதுபற்றி கடை உரிமையாளர் விஜய் சவுகார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வீடியோவை பரிசோதித்தபோது பணத்தை தினேஷ் கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர் ராஜஸ்தானுக்கு தப்பி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடி தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com