

கோவை:
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆனால் இதனை மீறி கோவை மாவட்ட போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பெரிய நாயக்கன் பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்த 35 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 580 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல கோவை மாநகர போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வெரைட்டி ஹால் ரோடு, சாய்பாபா காலனி, ராமநாதபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், குனியமுத்தூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 391 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.