காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் இன்று அதிகாலை ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு கொன்றனர். #terrorists #kashmir
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

புதுடெல்லி:

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்தப்படி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு அருகே சன்ஜவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுமார் 400 பேர், ஊடுருவல் செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியா முழுவதும் நாசவேலை செய்வதற்கு அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத் துறை இந்தியாவை உஷார் படுத்தியுள்ளது.

இதையடுத்து காஷ்மீர் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பலாகோட் செக்டாரில் சில தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபடுவதை ராணுவ வீரர்கள் கண்டு பிடித்தனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். என்றாலும் சில தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர்.

அவர்களை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு கொன்றனர். இதில் 6 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்ற தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் திரும்பி ஓடி விட்டனர். #tamilnews #terrorists #kashmir

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com