சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்றி காய்ச்சல்
பன்றி காய்ச்சல்
Published on

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவிடம் நீதிபதி சந்திரசூட் ஒரு கோரிக்கை வைத்தார்.

அதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனால் கோர்ட்டு ஊழியர்களுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து வக்கீல்கள் சங்கங்கள், நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே ஆலோசனை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com