

தொண்டி:
தொண்டி அருகே செக்காந்திடல் பகுதியில் சிலர் மணல் அள்ளுவதாக வி.ஏ.ஓ. பழனிச்சாமி தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் அதிவிரைவுப்படை போலீசார், தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
செக்காந்திடல் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிறுநல்லூரைச் சேர்ந்த செந்தில் முருகன்(வயது30) டிப்பர் லாரி டிரைவர்கள், கருங்காவயலைச் சேர்ந்த முனியராஜ்(32), தெற்கு ஊரணிங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் (18), மாதவனூர் ராஜமருது(19),சிறுவாளுர் அன்புகமல்(30), உசிலனக் கோட்டை ஆனந்த் (28), கோவிந்தமங்களம் நாகேந்திரன், கீழ்குடியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 2 டிப்பர் லாரி, 2 டிராக்டர், 2 ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews