சேலத்தில் துணிக்கடை அதிபர் மனைவியிடம் 6 பவுன் செயின் பறிப்பு

சேலத்தில் இன்று காலை கோலம் போட்டு கொண்டிருந்த துணிக்கடை அதிபர் மனைவியிடம் 6 பவுன் செயினை கொள்ளையர்கள் பறித்த சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் துணிக்கடை அதிபர் மனைவியிடம் 6 பவுன் செயின் பறிப்பு
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் ராம்ராஜர் தெருவை சேர்ந்தவர் சித்தலிங்கம் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மல்லிகா (வயது 48). இவர் இன்று காலை வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் மல்லிகா கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்து சென்றனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மல்லிகா திருடன்...திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினார்.

இது குறித்து மல்லிகா சூரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் செயினை பறித்து விட்டு தப்பியோடிய மர்ம நபரை அவரது மோட்டார் சைக்கிள் அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com