அமெரிக்காவில் பாலம் இடிந்து 6 பேர் பலி

அமெரிக்காவின் பிராங்கிளின் நகரில் பாலம் இடிந்து விபத்துகுள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாயினர்.
அமெரிக்கா பாலம் விபத்து
அமெரிக்கா பாலம் விபத்து
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதோடு பேய் மழையும் கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த நிலையில் அங்குள்ள பிராங்கிளின் நகரில் நேற்று முன்தினம் பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் 2 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதில் 4 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், ஒரு பெண் உள்பட 3 பேரும் பலியாகினர். அவர்களின் உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி மேலும் சிலர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com