பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்து- 6 குழந்தைகள், டிரைவர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். #HimachalAccident
பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்து- 6 குழந்தைகள், டிரைவர் உயிரிழப்பு
Published on

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டம் சங்ரா நகரில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து, மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் மலையில் இருந்து உருண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தினுள் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் டிரைவர் என 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HimachalAccident

X

Maalai Malar
www.maalaimalar.com