

புதுடெல்லி:
உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தரம் புரண்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 586 ரெயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது. அதில் பாதிக்கு மேல் ரெயில் தடம் புரண்டதால் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் மோசமான விபத்து 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கான்பூர் அருகில் நடைபெற்றது. இந்த ரெயில் விபத்தில் 150 பேர் பலியாகினர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னதாக, நரேந்திர மோடி 2014-ம் ஆண்டில் பிரதமரான பின்னர் ரெயில் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாததால் 27 ரெயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 259 பயணிகள் மரணமடைந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.