16 மாநிலங்களில் 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி

தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் மாசடைந்த 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக சுற்றுச்சூழல் மந்திரி பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மந்திரி பாபுல் சுப்ரியோ
சுற்றுச்சூழல் மந்திரி பாபுல் சுப்ரியோ
Published on

புதுடெல்லி:

தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் மாசடைந்த 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் மத்திய அரசு தனது பங்காக மாநிலங்களுக்கு ரூ.2,522 கோடி வழங்கி இருப்பதாகவும் சுற்றுச்சூழல் மந்திரி பாபுல் சுப்ரியோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நகர்ப்புற பகுதிகளில் நதிகள் அதிக அளவில் மாசடைவதாகவும், எனவே அவற்றை தூய்மைப்படுத்த நிதி உதவி தேவைப்படுவதாகவும் மாநிலங்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, கங்கை நீங்கலாக 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அப்போது அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com