டெல்லியில் 55 வயது பெண்ணை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது

நாட்டின் தலைநகரான டெல்லியின் வடக்கு பகுதியில் டீக்கடை நடத்தியவாறு தனியாக வசித்த 55 வயது பெண்ணை கற்பழித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

புதுடெல்லி:

வடக்கு டெல்லியில் உள்ள குலாபி பாக் பகுதியில்  சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் சிறிய டீக்கடை நடத்தியவாறு கடையிலேயே தனியாக வசித்து வந்தார்.

இன்று காலை வழக்கம்போல் அவரது கடைக்கு டீ குடிக்க வந்த ஒரு வாடிக்கையாளர் அந்தப்பெண் தரையில் பிணமாக கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தார்.

விரைந்துவந்த போலீசார் அருகாமையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது நேற்றிரவு அந்த டீக்கடைக்குள் ஒருவர் நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. அதே பகுதியில் வசிக்கும் அந்நபரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கைதான தர்மராஜ்(24) என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அந்தப் பெண்ணின் டீக்கடையில்  இதற்கு முன்னர் வேலை செய்தது தெரியவந்தது. பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில்

கடந்த வெள்ளிக்கிழமை தர்மராஜை அந்தப் பெண் தரக்குறைவாக திட்டியதுடன் முகத்தில்  உமிழ்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் நேற்றிரவு டீக்கடைக்குள் புகுந்து அந்தப் பெண்ணை கற்பழித்ததுடன் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இறந்த பெண்ணின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com