மாஞ்சா நூல் காற்றாடி விற்பனை- வடசென்னையில் ஒரே நாளில் 55 பேர் கைது

வடசென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி தயாரித்து விற்பவர்கள் மற்றும் காற்றாடி விட்டவர்கள் என நேற்று ஒரேநாளில் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாஞ்சா நூல் - காற்றாடி
மாஞ்சா நூல் - காற்றாடி
Published on

சென்னை:

சென்னை முழுவதும் மாஞ்சா நூல் காற்றாடி தயாரித்து விற்பவர்கள் மற்றும் காற்றாடி விடுபவர்களை போலீசார் வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.

வடசென்னையில் அதிரடியாக இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் வடசென்னையில் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 108 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com