டெல்லிக்கு கடத்தி வந்த 504 வெளிநாட்டு தங்க கட்டிகள் பறிமுதல்- 8 பேர் கைது

டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 504 வெளிநாட்டு தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட கடத்தல் தங்கம்
பிடிபட்ட கடத்தல் தங்கம்
Published on

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்களின் பொருட்கள் சோதனையிடப்படுகின்றன.

அவ்வகையில், புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வந்த 8 பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், அவர்களின் லக்கேஜில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 504 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், 8 பேரையும் கைது செய்தனர்.

இந்த தங்க கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளி குறித்து விசாரணை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com