ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் - 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.   தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்று வளைத்ததால் உடனடியாக அப்பகுதியில் உள்ள இன்டர்நெட் முடக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 3  பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற நிலையில், மேலும் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 2 பேரை  பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.   இதன் மூலம்  இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com