தல்லாகுளத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகையினை மர்ம நபர் பறித்து சென்றார்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

மதுரை:

மதுரை தல்லாகுளம் பரசுராம்பட்டி அருகே உள்ள சாந்தி நகரைச்சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது43). இவர் அரசினர் ஐ.டி.ஐ. முன்பாக தனியாக நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்ம நபர் ஜெயலட்சுமியை தாக்கிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் வில்லாபுரம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அய்யனார் (61). நேற்று இரவு இவர் சாலையில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அய்யனார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com