

புதுடெல்லி:
மத்திய நீர்வளத்துறை மந்திரியாக உமா பாரதி பணியாற்றி வந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யான ராஜீவ் பிரதாப் ரூடி, மத்திய திறன்மேம்பாட்டுத்துறை மந்திரியாக பதவிவகித்து வந்தார்.
மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாக வாரானாசி தொகுதி எம்.பி.யான மகேந்திர நாத் பாண்டே செயல்பட்டு வந்தார். அதேபோல் முசாபர்நகர் எம்.பி.யான சஞ்சிவ் பலியான் நீர்வளத்துறை இணை மந்திரியாக இருந்து வந்தார். குருராஜ் சிங், சிறு மற்றும் குறு தொழில்துறை இணையமைச்சராக பதவிவகித்து வந்தார்.
மத்திய மந்திரிசபை மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து, இரண்டு மத்திய மந்திரிகளும், முன்று இணை மந்திரிகளும் ராஜினாமா செய்துள்ளனர். கடந்த முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போதும் சில மந்திரிகள் இதேபோல் ராஜினாமா செய்தனர். எனினும் இவர்களின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
வருகிற 3ம் தேதி சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் மோடி அதன் பின்னர் மியான்மர் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக செல்ல இருக்கிறார். இந்த பயணத்தை முடித்துகொண்டு செப்டம்பர் 7ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று திருப்பதி சென்றுவிட்டு நாளை டெல்லி திரும்புகிறார். எனவே நாளை அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மோடி அரசு போறுப்பேற்றதில் இருந்து
நடைபெற உள்ள மூன்றாவது அமைச்சரவை விரிவாக்கமாகும்.