ஜார்கண்ட்டில் தலைக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட்டு கைது
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின் போது ஒரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த அக்பகி கிராமத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், மாவட்ட போலீசாரும் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின் ஐந்து மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான சார்லி (எ) சேகரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கிச்சண்டை ஏதும் நடக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சார்லி (எ) சேகர் தலைக்கு அம்மாநில அரசு ரூ. 5 லட்சம் பரிசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 5 #Maoistsheld #Jharkhand #tamilnews

