எலி மருந்தில் பல் துலக்கிய 5 சிறுமிகள்- ராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பற்பசை என்று நினைத்து எலி மருந்தில் பல் துலக்கிய 5 சிறுமிகள் மயக்கம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமிகளை படத்தில் காணலாம்.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமிகளை படத்தில் காணலாம்.
Published on

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே கட்டாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர், செல்லத்துரை. அவருடைய மகள்கள் ஆர்த்தி (வயது11), கீர்த்தி(12).

அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகள் சுபிக்‌ஷா. உடையப்பன் மகள் முத்துபாண்டீஸ்வரி (13), ராமதாஸ் மகள் அங்காளஈஸ்வரி. இவர்களது வீடுகள் அருகருகே உள்ளன.

இந்தநிலையில் சிறுமிகள் 5 பேரும் ஒன்றாக விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது கீழே கிடந்த எலி மருந்து பசையை எடுத்து விஷம் என்று தெரியாமல் பற்பசை என்று நினைத்து பல்துலக்கி உள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனே 5 பேரையும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com