

சென்னை:
திருச்சி கோட்டத்தில் உள்ள வாளாடி-பொன்மலை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் 5 நாட்கள் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டத்தில் உள்ள வாளாடி-பொன்மலை இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், 18-ந் தேதி (இன்று) முதல் 22-ந் தேதி வரையிலான 5 நாட்கள் பல்வேறு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வந்து சேரும் ரெயில்களின் நேரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் வருமாறு:-
* 18-ந் தேதி (இன்று) சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16853), திருச்சிக்கு ஒரு மணி நேரம் தாமதாக சென்றடையும்.
* இதேபோல் எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127) லால்குடி ரெயில் நிலையத்துக்கு 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.
* 19-ந் தேதி (நாளை) எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127), 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக காலை 9.25 மணிக்கு புறப்படும்.
* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) திருச்சியில் நின்று 15 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
* சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16853), விழுப்புரம்-திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சி சென்றடையும்.
* 20-ந் தேதி எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127), 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக காலை 9.25 மணிக்கு புறப்படும்.
* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) திருச்சியில் நின்று 15 நிமிடங்கள் தாமதமாக புறப் படும்.
* 21-ந் தேதி எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127), 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக காலை 9.25 மணிக்கு புறப்படும்.
* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) திருச்சியில் நின்று 15 நிமிடங்கள் தாமதமாக புறப் படும்.
* 22-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127), 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக காலை 9.25 மணிக்கு புறப்படும்.
* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) திருச்சியில் நின்று 15 நிமிடங்கள் தாமதமாக புறப் படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.