46 நாட்கள் நடைபெறவுள்ள அமர்நாத் யாத்திரை ஜூலை ஒன்று முதல் தொடக்கம்

அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை ஒன்றாம் தேதி தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AmarnathYatra #Amarnathpilgrims
46 நாட்கள் நடைபெறவுள்ள அமர்நாத் யாத்திரை ஜூலை ஒன்று முதல் தொடக்கம்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். பக்தர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நத் யாத்திரை வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது என ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு கவர்னர் சத்ய பால் மாலிக் தலைமையில் 36-வது கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் யாத்திரை நிறைவடையும். அமர்நாத் யாத்திரை சுமார் 46 நாட்கள் நடைபெற உள்ளது என தெரிவித்தனர். #AmarnathYatra #Amarnathpilgrims

X

Maalai Malar
www.maalaimalar.com