சிரியா: ரக்கா நகரின்மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை - 19 குழந்தைகள் உள்பட 42 பேர் பலி

ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 19 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 42 பேர் உயிரிழந்தனர்.
சிரியா: ரக்கா நகரின்மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை - 19 குழந்தைகள் உள்பட 42 பேர் பலி
Published on

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் புரட்சி நடந்து வருகிறது. அரசுப் படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை தீர்த்துகட்டும் பணியில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளின் விமானப் படைகள் அவ்வப்போது வான்வழி தாக்குதலில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அந்நகரின் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த தாக்குதலில் ரக்கா நகரை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்த 19 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 42 பேர் உயிரிழந்ததாக சிரியா போர் நிலவரங்களை கண்காணித்துவரும் நடுநிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com