சூளைமேடு அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் இருந்து விழுந்து 4 வயது சிறுமி பலி

சூளைமேடு அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் இருந்து விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChildDeath
சூளைமேடு அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் இருந்து விழுந்து 4 வயது சிறுமி பலி
Published on

சென்னை:

சூளைமேடு மஞ்சு பிளாக் சித்ரா அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோபால். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 4 வயதில் சாரதா என்ற மகளும், ஒரு வயதில் கைக்குழந்தையும் இருந்தனர்.

சாரதா அருகில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வந்தாள். அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வந்தனர்.

நேற்று மாலை வீட்டில் கீதா 2 குழந்தைகளுடன் இருந்தார். அப்போது சிறுமி சாரதா தூங்கினார். இதையடுத்து கீதா கைக்குழந்தையுடன் அருகில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தூக்கத்தில் இருந்த குழந்தை சிறுமி சாரதா அருகில் தாய் இல்லாததை கண்டாள். பின்னர் அவள் தாயை தேடி மாடியில் உள்ள பால்கனியில் நின்றபடி கீழே பார்த்தாள்.

அப்போது நிலை தடுமாறிய அவள் 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் சாரதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவளை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சிறுமி சாரதா பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChildDeath

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com