மதுரையில் பெண் ஆசை காட்டி வாலிபரிடம் 4 பவுன் பறிப்பு: 2 பேர் கைது

பெண் ஆசை காட்டி வாலிபரிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மதுரை:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த 32 வயதுடைய வாலிபர் வேலை நிமித்தமாக மதுரைக்கு வந்தார். அண்ணாநகர் பகுதியில் உள்ள பேக்கரி முன்பு அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரை ஜீவாநகரைச் சேர்ந்த தினேஷ் (30) என்பவர் அங்கு வந்து வாலிபரிடம் பேச்சு கொடுத்தார். உல்லாசமாக இருக்க குறைந்த செலவில் பெண்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

இதை நம்பி அவர் தினேசுடன் ஆட்டோவில் சென்றார். கோமதிபுரம் சாலை வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு வாலிபரை அழைத்து சென்ற தினேஷ் நைசாக பேசி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டார். இதற்கு உடந்தையாக செல்லூர் மீனாட்சிபுரம் வ.உ.சி. தெருவைச்சேர்ந்த கலைச்செல்வி (30) என்பவரும் இருந்துள்ளார்.

பின்னர் வெளியே சென்ற தினேஷ், கலைச்செல்வி நீண்ட நேரமாகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவகாசி வாலிபர் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், கலைச் செல்வியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com