ஆப்கானிஸ்தான் - அரசு அலுவலகம் மீது கார்குண்டு தாக்குதலில் 4 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் அரசு அலுவலகத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்த காத்திருக்கும் தலிபான் பயங்கரவாதிகள்
தாக்குதல் நடத்த காத்திருக்கும் தலிபான் பயங்கரவாதிகள்
Published on

ஆப்கானிஸ்தான் நாட்டில் விரைவில் அதிபர் பதவி மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் மத்திய பகுதியான கஸ்னி மாகாணத்துக்குட்பட்ட அப் பன்ட் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்தை குறிவைத்து தலிபான் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இன்று அதிகாலை கார்குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com