35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாகப் பாம்பு விஷம் கடத்திய 4 பேர் கைது

மகாராஷ்டிராவில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாகப் பாம்பு விஷத்தை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாகப் பாம்பு விஷம் கடத்திய 4 பேர் கைது
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தின் அம்போலிச் சாலையில் நேற்று இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சோதனை செய்ததில் அவர்களிடம் 600 மில்லிகிராம் அளவுள்ள நாகப்பாம்பு விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதைத்தொடர்ந்து விஷத்தை கைப்பற்றிய போலீசார் மூவரிடமும் விசாரணை செய்தனர். விசாரணையின் போது அவர்கள் விஷத்தை கடத்தி ஒருவரிடம் விற்க சென்ற உண்மையை ஒப்புக்கொண்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், பாம்பு விஷத்தை வெளிமாநிலங்களுக்கு விற்கும் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com