ஜார்கண்ட்: கண்ணிவெடியில் சிக்கி 4 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் காயம்

ஜார்கண்ட் மாநிலம் லத்கர் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின் போது கண்ணிவெடியில் சிக்கி நான்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் காயமடைந்தனர்.
ஜார்கண்ட்: கண்ணிவெடியில் சிக்கி 4 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் காயம்
Published on

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தின் லத்கர் மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த லடு காட்டுப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், மாவட்ட போலீசாரும் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி நான்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக  ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் நால்வரும் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் கெங்கே, ஹாவ் நிதீஸ் பாண்டே, கோபால் யாதவ் மற்றும் தீபக் சிங் ஆகியோர் காயமடைந்துள்ளதாக துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விபுல் ஷுக்லா தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com